கொரோனா பாதிப்பு: மலேரியாவுக்கு பயன்படுத்தும் குளோரோகுயின் பயன்படுத்த அமெரிக்க முடிவு

" alt="" aria-hidden="true" />

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 



 



உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,035 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 3,405 பேரும், சீனாவில் 3,245 பேர், ஈரான் - 1,284 பேர், ஸ்பெயின் - 831 பேர், இதையடுத்து இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அமெரிக்காவில் நேற்று கொரோனா வைரஸ் பாதுப்பு 13,000 கடந்து உள்ளது.

 

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில், மலேரியா மற்றும் ஆர்த்ரிடிஸ்  தடுப்பு மருந்தான குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரீசிலித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

 

இம்மருந்தானது பிற நோய்களுக்கு ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு நல்ல முடிவுகள் வந்துள்ளதால், நோயாளிகள் யாருக்கும் இம்மருந்தால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. குளோரோகுயின் மருந்தை பரவலாக கிடைக்கவைப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

 

இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறும் போது  தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் ஒப்புதல்களை விரைவுபடுத்த விரும்புகிறேன். அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை, ஆனால் உலகெங்கிலும் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள் குளோரோகுயின் உட்பட பரவலாக கிடைக்கக்கூடிய பல மருந்துகளைப் ஆய்வு செய்து வருகிறார்கள் என கூறினார். குளோரோகுயினை கேம் சேஞ்சர் என குறிப்பிட்டார்.

 

இந்த மருந்து 1940 களில் இருந்து வருகிறது, இது பொதுவாக பாதுகாப்பானது மற்றும் லேசான முதல் மிதமான அளவுகளில் நன்கு செயல்படுகிறது. இருப்பினும் இது அதிக அளவுகளில் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம். சில ஆட்டோ இம்யூன் கோளாறுகளுக்கு மேலதிகமாக மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பொதுவானதாக கிடைக்கிறது, அதாவது இது  மலிவான சிகிச்சையாக இருக்கலாம்.

 

ஆனால் கொசுக்களால் பரவும் நோய்க்கு மலிவான பழமையான சிகிச்சையான குளோரோகுயினை  கொரோனாவுக்கு பயன்படுத்த விரிவாக்கப்பட்ட சோதனையை நடத்த வேண்டும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறி உள்ளது.

 

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு குளோரோகுயின் எனப்படும் பழைய மலேரியா எதிர்ப்பு மாத்திரையை பரிசோதிக்க  பரிசீலித்து வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் நேற்று தெரிவித்தார்.