நடிகை ரஷ்மிகா ரூ. 1.5 கோடி வரி ஏய்ப்பு, ரூ. 3.94 கோடி சொத்துக்கள் பறிமுதல்
நடிகை ரஷ்மிகா மந்தனா கணக்கில் காட்டாமல் வைத்திருந்த ரூ. 3.94 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.



கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டில் வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி வருமான வரித்துறையினர் அவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். மேலும் ரஷ்மிகாவின் குடும்பத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.