வரலாறு முக்கியம் அமைச்சரே: அமெரிக்க அதிபரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

எனது உருவத்தை ஓவியமாக வரைந்து வைத்தால் சற்று டொங்கை போன்று இருக்கும். எனவே, என்னை புஜபல பராக்கிரமசாலி போன்று காட்டுவதற்காக இது போன்று ஒரு ஏற்பாடு


இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில், மன்னர் வடிவேலு தனது உடலை போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அருகில் கட்டுமஸ்தான ஒருவரின் தலை போர்த்தப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் அங்கு வரும் அவரது அமைச்சர், மன்னரிடம் இதுகுறித்து கேட்பார்.


அதற்கு பதிலளிக்கும் வடிவேலு, எனது தலை அந்த உடலுடன் சேரப்போகிறது என்பார். புரியாமல் திருதிருவென முழிக்கும் அமைச்சரிடம் நீர் மங்குனி தானே என கூறும் வடிவேலு, நான் என்னதான் விண்ணுலகமும், மண்ணுலகமும் போற்றும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்தாலும், எனது உருவத்தை ஓவியமாக வரைந்து வைத்தால் சற்று டொங்கை போன்று இருக்கும்.


எனவே என்னை புஜபல பராக்கிரமசாலி போன்று காட்டுவதற்காக இது போன்று ஓவியத்தின் மூலம் ஒரு ஏற்பாடு. பின்னாட்களில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்பதா தெரியப்போகிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே என்று கூறுவார் வடிவேலு.