ஸ்ரீ பால தத்தாத்ரேயர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா.
காஞ்சிபுரம் மாவட்டம்

அச்சிறுபாக்கம் அருகே பால தத்தாத்ரேய ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடமலைப்புத்தூரில் உள்ள தத்தாத்திரேயர் குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தி  ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நேற்று விடியர் காலை மங்கல இசையுடன் தொடங்கியது. 

முன்னதாக ஆலயம் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சரியாக விடியற்காலை 3.45 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது காலை 9 மணிக்கு குருபெயர்ச்சி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் யாக பூஜையில் கலந்து கொண்டு குரு பகவானை வழிபட்டனர். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சென்னை, காஞ்சிபுரம், அச்சிறுபாக்கம், திண்டிவனம், விழுப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தனர்.